News November 11, 2025

புதுவை பல்கலைக்கழகத்துக்கு 470வது இடம்

image

சர்வதேச நிறுவனமான குவாக்கரல்லி சிமண்ட்ஸ் ஆசிய பல்கலைக்கழகம் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆசியாவை சேர்ந்த 48 நாடுகளில் இருந்து 1,526 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், சர்வதேச அளவில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 30.7 மதிப்பெண்களுடன் 470வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த கல்வியாண்டில் (2024-25) 18.8 மதிப்பெண்களுடன் 501-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 22, 2026

புதுச்சேரி: லைசன்ஸ் எடுப்பது இனி ஈசி..!

image

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<> parivahansewas.com <<>>என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News March 22, 2026

என்.டி.ஏ கூட்டணிக்கு யாதவர் பாதுகாப்பு பேரவை ஆதரவு

image

புதுச்சேரியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவை தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்கும் இந்தத் தேர்தலில், யாதவர் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டணிக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள் என்று புதுச்சேரி மாநிலத் தலைவர் குமார் அறிவித்துள்ளார்.

News March 22, 2026

புதுச்சேரி: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பட்டியலை, பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெளியிட்டார். உப்பளம் (15) தொகுதியில் அன்பழகன் (முன்னாள் எம்எல்ஏ, மாநில கழகச் செயலாளர் மற்றும் உருளையன்பேட்டை (16) தொகுதியில் காந்தி முன்னாள் துணைச் செயலாளர் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!