News November 11, 2025
மயிலாடுதுறை வட்டத்தில் “உழவரைத் தேடி” முகாம்

மயிலாடுதுறை வட்டம் வரதம்பட்டு மற்றும் திருச்சிற்றம்பலம் கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் வருகிற (நவ.14) தேதி காலை 10:30 மணிக்கு உழவர் நலத்துறை திட்டத்தின் கீழ் “உழவரை தேடி” முகாம் நடைபெற உள்ளது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாக மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று (நவ.11) நடைபெற்றது. வாக்காளர் பதிவு அலுவலரால் நடத்தப்பட்ட இந்த வகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 11, 2025
மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பட்டமங்கலம் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று (நவ.11) நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சித்ரா ஆகியோர் உடன் பங்கேற்றனர்.
News November 11, 2025
மயிலாடுதுறை கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி

கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வருகிற வியாழக்கிழமை (நவ.13) காலை நடைபெற உள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினராக கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி கலந்து கொள்ள உள்ளார். மயிலாடுதுறை சுற்றுவட்டார கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


