News November 11, 2025
பிரபல பாடகிக்கு திருமணம் முடிந்தது ❤️❤️

KGF படத்தின் மெஹபூபா, தீரா தீரா உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடிய அனன்யா பட்டிற்கு இன்று திருமணம் முடிந்தது. டிரம்மர் மஞ்சுநாத்தை அவர் கரம்பிடித்துள்ளார். திருமலையில் நடைபெற்ற திருமணத்தில், குடும்பத்தினர், உறவினர்கள் பங்கேற்று வாழ்த்தினர். திருமண போட்டோஸை அவர் SM-ல் பதிவிட்டதை அடுத்து, நட்சத்திர தம்பதிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. லைக் செய்து நீங்களும் ஒரு வாழ்த்து சொல்லலாமே..!
Similar News
News November 11, 2025
பொங்கல் விடுமுறை.. 8 நாள்கள் அறிவிப்பு வெளியானது

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையை, பொங்கல் விடுமுறையையொட்டி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 11-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை(நவ.12) தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு நாளாக கணக்கிட்டு நவ.19-ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும். SHARE IT
News November 11, 2025
ஓய்வு முடிவை அறிவித்தார் ரொனால்டோ

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்னும் 1 அல்லது 2 ஆண்டுகளில் ஓய்வு பெறுவேன் என்று தெரிவித்துள்ளார். 2026 உலகக் கோப்பையில் விளையாட திட்டமிட்டுள்ள அவர், அப்போது தனக்கு 41 வயதாகி இருக்கும் என்றும், ஓய்வு பெறுவதற்கு அதுவே சரியான தருணம் எனவும் பேசியுள்ளார். அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு போர்ச்சுகல் அணி இதுவரை தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News November 11, 2025
BREAKING: 2026-ல் 24 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

2026-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் அட்டவணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டில் 24 நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், தைப்பூசம், மகாவீரர் ஜெயந்தி, ரம்ஜான், புனித வெள்ளி, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட 24 நாள்கள் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


