News November 11, 2025
தலைமுடியை மென்மையாக்க சில டிப்ஸ்!

➤தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து முடியின் வேர் வரை தடவி, 30 நிமிடங்கள் ஊறவைத்து அலசலாம் ➤சல்பேட் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்ந்தெடுங்கள் ➤ஹேர் டிரையர்கள், ஸ்ட்ரைட்னர்கள் போன்ற சூடான கருவிகளை பயன்படுத்த வேண்டாம் ➤பிளாஸ்டிக் சீப்புகளுக்கு பதிலாக மர சீப்புகளை பயன்படுத்தலாம் ➤வாரத்திற்கு 2 முறை எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம். SHARE THIS.
Similar News
News November 11, 2025
பொங்கல் விடுமுறை.. 8 நாள்கள் அறிவிப்பு வெளியானது

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையை, பொங்கல் விடுமுறையையொட்டி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 11-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை(நவ.12) தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு நாளாக கணக்கிட்டு நவ.19-ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும். SHARE IT
News November 11, 2025
ஓய்வு முடிவை அறிவித்தார் ரொனால்டோ

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்னும் 1 அல்லது 2 ஆண்டுகளில் ஓய்வு பெறுவேன் என்று தெரிவித்துள்ளார். 2026 உலகக் கோப்பையில் விளையாட திட்டமிட்டுள்ள அவர், அப்போது தனக்கு 41 வயதாகி இருக்கும் என்றும், ஓய்வு பெறுவதற்கு அதுவே சரியான தருணம் எனவும் பேசியுள்ளார். அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு போர்ச்சுகல் அணி இதுவரை தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News November 11, 2025
BREAKING: 2026-ல் 24 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

2026-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் அட்டவணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டில் 24 நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், தைப்பூசம், மகாவீரர் ஜெயந்தி, ரம்ஜான், புனித வெள்ளி, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட 24 நாள்கள் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


