News November 11, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயதிற்குட்பட்ட மறுவேலைவாய்ப்பு பெற்ற முன்னாள் படைவீரர்களைத் தவிர்த்து, மற்ற முன்னாள் படைவீரர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். திறன் பயிற்சி பெற விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது விருப்ப விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்தார்.
Similar News
News November 12, 2025
திண்டுக்கல்லில் தலைப்புச் செய்திகள்

1.பழனி தாலுகா காவல் நிலையம்: பாஸ்கரன் ஆய்வாளராக பொறுப்பேற்றார்.
2. திண்டுக்கல் மருத்துவமனை: அரசு மருத்துவர்கள் சங்கம் தர்ணா.
3. பழனி நூற்றாண்டுவிழா: கல்வி, உணவு வழங்கல் அமைச்சர்கள் பங்கேற்பு.
4. மாற்றுத்திறனாளிகள்: மாதாந்திர உதவி தொகை உயர்த்த கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்.
5. ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பயிற்சி வகுப்பு ஆட்சியர் சரவணன் துவக்கம்.
News November 11, 2025
சிறுமலையில் மரத்திலிருந்து விழுந்து வாலிபர் உயிரிழப்பு!

திண்டுக்கல் சிறுமலை பழையூரைச் சேர்ந்த சுரேஷ் (28) அப்பகுதி தோட்டத்தில் சவுக்கு மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தார். தலைக்கு ஏற்பட்ட கடும் காயம் காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாபமாக உயிரிழந்தார். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் விசாரிக்கின்றனர்.
News November 11, 2025
திண்டுக்கல்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.


