News November 11, 2025

கள்ளக்குறிச்சி: இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த<> லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News November 11, 2025

பயிர் காப்பீடு திட்டம்-ஆட்சியர் வேண்டுகோள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இவ்வாண்டில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல் (சம்பா -2) மற்றும் உளுந்து பயிருக்கு நவம்பர் 15-ஆம் தேதி வரையில் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ.11) தெரிவித்துள்ளார். மேலும், தேவையான ஆவணங்களை பயன்படுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் 88,630 பயனாளிகள் பயன்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களின் நலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் 88,630 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (நவ.11) அறிவிக்கப்பட்டுள்ளது

News November 11, 2025

கள்ளக்குறிச்சி: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!