News November 11, 2025
பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்

ஏர்டெல்லின் குறைந்த விலை ₹189 ரீசார்ஜ் பிளான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த பிளானை பயன்படுத்தி வந்த பிரீபெய்ட் பயனர்களுக்கு இனி ₹199 பிளானை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிளானில் 2 GB data, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 SMS தினசரி வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாள்கள். முன்னதாக, ₹189 ரீசார்ஜ் பிளான் இன்டர்நெட் தேவையில்லாத பயனர்களுக்கு வசதியாக இருந்தது.
Similar News
News November 11, 2025
அதிமுக, விஜய் கூட்டணி… முடிவை அறிவித்தார்

தவெகவுடன் கூட்டணி அமையாததால் அதிமுக விரக்தியில் இருப்பதாக பேசிய TTV தினகரனுக்கு RB உதயகுமார் பதிலளித்துள்ளார். அரசியல் கட்சித் தலைவர்கள் ஜனவரியில்தான் கூட்டணி குறித்து முடிவெடுப்பார்கள் எனத் தெரிவித்த அவர், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான களப்பணி நடந்து வருவதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கூட்டணிக்கு தவெக வரும் என்பதே அதிமுக முக்கியத் தலைவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
News November 11, 2025
தனியாக பயணம் செய்ய சிறந்த நாடுகள்.. No. 1 எது தெரியுமா?

நீங்கள் தனியாக பயணம் செய்ய நினைக்கிறீர்களா? சுற்றுலா நிறுவனமான கென்சிங்டன் டூர்ஸ் சமீபத்தில் வெளியிட்ட ‘தனியாக பயணிக்க சிறந்த நாடுகள்’ பட்டியலைப் பார்த்தீர்களா? டாப் 10 நாடுகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். முதலிடத்தில் உள்ள நாடு, உங்களை பெருமை அடைய செய்யும்.
News November 11, 2025
பாஜக ஆட்சியை பிடிப்பது உறுதி… NDTV கணிப்பு

பிஹார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை NDTV வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜேடியு-பாஜகவின் NDA கூட்டணி 152, ஆர்ஜேடி-காங்., உள்ளடக்கிய மகா கூட்டணி 84 , ஜேஎஸ்பி கட்சி 2, மற்றவை 5 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகளின் படி பார்த்தால் NDA கூட்டணி ஆட்சி அமைப்பதற்கே அதிக வாய்ப்புள்ளது என்று கணிக்கப்படுகிறது.


