News November 11, 2025

BREAKING: தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம்

image

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளை தொடரலாம் என SC தெரிவித்துள்ளது. தமிழகத்தில் SIR மேற்கொள்வதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக 2 வாரத்தில் ECI பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும். SIR-க்கு ஆதரவாக இந்த வழக்கில் அதிமுக தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்க SC மறுப்பு தெரிவித்துள்ளது.

Similar News

News November 11, 2025

EXIT POLL: பிஹாரில் NDA கூட்டணி 145+

image

பிஹாரில் 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் NDA கூட்டணி வெல்லும் என Dainik Bhaskar கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் NDA கூட்டணி 145-160 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. MGB கூட்டணி 73-91 தொகுதிகள் கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதர கட்சிகள் 5 முதல் 10 தொகுதிகள் வரை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

BIHAR EXIT POLL: தேஜஸ்விக்கு இந்த முறையும் வாய்ப்பில்லை

image

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் பாஜக கூட்டணிக்கு(NDA) சாதகமாகவே உள்ளன. MATRIZE-IANS உடன் இணைந்து ABP நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் NDA-வுக்கே வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. NDA கூட்டணி 147 முதல் 167 இடங்களை வெல்லும். தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி-காங்., உள்ளடக்கிய மகாகத்பந்தன் கூட்டணி 70-90 இடங்கள், மற்றவை 0-7 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

EXIT POLL: பிஹாரில் மீண்டும் ஆட்சி அமைப்பது யார்?

image

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. Gyaan Ka Bhandar India வெளியிட்டுள்ள சர்வேப்படி, NDA: 165-175, MGB: 65-70, மற்றவை: 3-10 இடங்கள் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. People’s Insight கருத்து கணிப்பு முடிவில் NDA: 133-148, MGB: 87-102, JSP: 0-2, மற்றவை: 3-6 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!