News November 11, 2025
மத்திய அரசில் 542 பணியிடங்கள்: ₹63,000 சம்பளம்!

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பிலுள்ள Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ◈கல்வித்தகுதி: 10, ITI தேர்ச்சி ◈வயது வரம்பு: 18 – 25 ◈சம்பளம்: ₹18,000 – ₹63,200 வரை ◈விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 24. ◈மேலும் அறிய & விண்ணப்பிக்க <
Similar News
News November 11, 2025
பிஹாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

பிஹாரில் இறுதிக்கட்டமாக இன்று நடைபெற்ற 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. டெல்லி வெடிகுண்டு சம்பவத்தின் எதிரொலியாக, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஏற்கெனவே முதற்கட்ட தேர்தலில் 65.08% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
News November 11, 2025
ரஷித் கானுக்கு 2-வது திருமணம்?

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், கடந்த ஆக.20-ம் தேதி வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியதாக தெரிவித்துள்ளார். தான் எதிர்பார்த்தது போல அன்பு, அமைதியை உருவகப்படுத்தும் வகையில் தன் மனைவி திகழ்வதாக கூறியுள்ளார். ரஷித் கான் கடந்த ஆண்டு தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 11, 2025
ALERT: தங்கம் விலை தடாலடியாக மாறுகிறது

24 காரட் தங்கம் 10 கிராம்- ₹1.25 லட்சம், வெள்ளி 1 கிலோ ₹1.55 லட்சம் என விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. USA ஃபெடரல் வங்கி, வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, பலவீனமான US டாலர், அமெரிக்க அரசின் ஷட் டவுன் மற்றும் சர்வதேச பிரச்னைகள் காரணமாக அனைவரும் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர். அவ்வப்போது சற்று குறைந்தாலும், அடுத்த ஆண்டுவரை உயர்வு தொடரும் எனக் கணிக்கப்படுகிறது. ஆகவே கவனமா முடிவெடுங்க.


