News November 11, 2025
சென்னை: முக்கிய தொடர்பு எண்கள்!

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் – 044-23452726, எழும்பூர் – 044-28455168, கிண்டி – 044-24700011, புளியந்தோப்பு -044-23452523, தி,நகர் – 044 – 23452614. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.
Similar News
News November 11, 2025
29,704 டிக்கெட்டு விற்று சாதனை படைத்த சென்னை ஒன் செயலி

சென்னையில் மக்கள் பயணத்தை எளிதாக மேற்கொள்ள சென்னை ஒன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் பொது போக்குவரத்திற்கு ஒரே டிக்கெட்டை பயன்படுத்தலாம். அந்த வகையில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நேற்று அதிகப்பட்சமாக 29,704 டிக்கெட்டுகள் பதிவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத வகையில், அதிகமாக பதிவான டிக்கெட் எண்ணிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 11, 2025
சென்னை: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News November 11, 2025
சென்னை: திருமாவளவன் பேனரால் சர்ச்சை

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி, சென்னை மிண்ட் தங்கசாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் தலைவர் தொல் திருமாவளவனை “வருங்கால முதல்வர்” எனக் குறிப்பிடும் பேனர் வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


