News November 11, 2025
ஒரு மரணம்… நிலைகுலைந்து போன 8 பேரின் கனவுகள்!

டெல்லி குண்டுவெடிப்பு, பல குடும்பங்களை சிதறடித்துவிட்டது. தாய், சகோதரர், மனைவி, 4 குழந்தைகளின் கனவுகளை பூர்த்தி செய்து வந்த அசோக் என்பவரை இன்று அக்குடும்பம் இழந்துவிட்டது. பகலில் பஸ் கண்டக்டராக, இரவில் செக்யூரிட்டியாக ஓயாது உழைத்து கொண்டிருந்தவரின் உயிரை குண்டுவெடிப்பு பறித்துவிட்டது. லோகேஷ் என்ற நண்பரை அழைத்து வர சென்ற பயணம், அசோக்கின் இறுதி பயணமாகிவிட்டது. இந்த கண்ணீருக்கு யார் பதில் சொல்வது?
Similar News
News March 12, 2026
பள்ளத்தில் மோதியதால் திரும்பி வந்த பெண்ணின் உயிர்!

டாக்டர்களால் கைவிடப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிர்பிழைத்தால் ’மெடிக்கல் மிராக்கிள்’ என சொல்வதுண்டு. அப்படிப்பட்ட மிராக்கிள் சம்பவம் உ.பி.,யில் நடந்துள்ளது. மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட வினீதா சுக்லா என்ற பெண், இறுதிச் சடங்குகளுக்காக ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார். வழியில் ஆம்புலன்ஸ் ஒரு பள்ளத்தில் மோதியதால் ஏற்பட்ட அதிர்வலையில் அதிர்ஷ்டவசமாக அவரது உயிர் திரும்ப வந்துள்ளது.
News March 12, 2026
பாஜகவுடன் அதிமுகவை EPS இணைத்துவிடுவார்: உதயநிதி

வரும் தேர்தலில் பாஜக-அதிமுக அடங்கிய டெல்லி அணியை TN மக்கள் கிளீன் போல்ட் செய்வார்கள் என உதயநிதி கூறியுள்ளார். அரியலூரில் பேசிய அவர், தமிழகத்துக்கான 3,200 கோடி கல்வி நிதி, 100 நாள் வேலை திட்ட நிதியை தராமல் பாஜக அரசு வஞ்சிக்கிறது; இந்த அநியாயத்திற்கு EPS துணை போகிறார் என உதயநிதி குற்றஞ்சாட்டினார். அத்துடன் தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் அதிமுகவை EPS இணைத்துவிடுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
News March 12, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கண் அழியாமை ▶குறள் எண்: 630 ▶குறள்: இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு. ▶பொருள்: துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.


