News November 11, 2025

திருவள்ளூர்: பிக் பாஸ் வீட்டில் வெடிகுண்டா..?

image

திருவள்ளூர்: பூவிருந்தவல்லியில் உள்ள ஈவிஎம் பிலிம் சிட்டிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் மோப்ப நாய் மற்றும் வெடிக்குண்டு நிபுணர்களுடன் நசரத்பேட்டை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அந்த செட்டில் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து தவாக சார்பாக போராட்டம் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 11, 2025

திருவள்ளூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!

News November 11, 2025

அறிவித்தார் திருவள்ளூர் கலெக்டர்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் நானோ யூரியா(Nano Urea) பயன்படுத்துவதால் இலை வழி தெளிப்பு செய்து நெற்பயிருக்கு தேவையான தளை சத்தை நேரடியாக கொடுப்பதுடன் நல்ல மகசூல் கிடைத்து மண் வளம் பாதுகாக்கப்படும். மேலும், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பாதுகாக்கப்பட்டு மண் வளம் மேம்படுகிறது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

திருவள்ளூர்: Loan App மோசடியா? உடனே புகார்!

image

திருவள்ளூர் மக்களே.., பாதுகாப்பற்ற Loan App-கள் மூலம் கடன் பெறாதீர்கள். இவை உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி, மிரட்டி பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. வங்கிகள் மட்டுமே நம்பகமான வழி. போலியான செயலிகளால் ஏமாறாமல், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சந்தேகங்கள் இருந்தால் உடனே 1930 அழையுங்கள் அல்லது <>இங்கே<<>> கிளிக் செய்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!