News November 11, 2025

சென்னை: லைசன்ஸ் இல்லையென்ற கவலை இனி இல்லை

image

சென்னையில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 11, 2026

மதுரவாயலில் பாலியல் சீண்டல்: வாலிபர் கைது!

image

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 41 வயது பெண், தனது மகன், மகளுடன் மார்ச் 8ம் தேதி மதுரவாயல் டேனியல் தாமஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்தபின், சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பி சென்றார். புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையில் சுராஜா பத்ரா (24), நேற்று கைது செய்தனர்.

News March 10, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னையில் இன்று (மார்ச்.10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 10, 2026

சென்னை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

சென்னையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

error: Content is protected !!