News November 11, 2025
ஈரோட்டில் மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை காலை, 11 மணிக்கு மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், செயற்பொறியாளர் தெற்கு கோட்ட அலுவலகம் 948- ஈ.வி.என்.சாலை, ஈரோடு-9 என்ற முகவரியில் நடக்கிறது.
சோலார், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம் அரச்சலூர், எழுமாத்தூர், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதி பயனீட்டாளர் தங்கள் குறைகளை கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
Similar News
News November 11, 2025
பவானி: தாயை கல்லால் அடித்துக் கொலை செய்த மகன்

பவானி அருகே மயிலம் பாடி சானார் பாளையம் பகுதியைச் சேர்ந்த ராக்கம்மாள்(65) என்பவரை அவரது மகன் பழனிச்சாமி 45 என்பவர் குடிபோதையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் வைத்து கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். உயிரிழந்த ராக்கம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணைக்கு பின்னர் பழனிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
News November 11, 2025
ஈரோடு: சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை

ஆன்லைன் டாஸ்க் என்பது இணையம் சார்ந்த குற்றங்களைக் குறிக்கிறது, இதில் கணினிகள் மற்றும் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி மோசடி, அடையாள திருட்டு போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டால், உடனடியாக 1930 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் அல்லது Cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News November 11, 2025
ஈரோடு: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

ஈரோடு மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <


