News November 11, 2025
தி.மலை மகா தீபம் தேதி அறிவிப்பு!

தி.மலையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 24-கொடியேற்றம், நவம்பர் 27-வெள்ளி கற்பக விருட்சம் & வெள்ளி காமதேனு வாகனம், நவம்பர் 28-வெள்ளி ரிஷப வாகனம், நவம்பர் 29-வெள்ளி ரதம், நவம்பர் 30-பஞ்சமூர்த்திகள் மகா ரதம், டிசம்பர் 3-காலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் நடைபெறவுள்ளது. மகா தீபம் நடைபெறும் தேதியை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்க.
Similar News
News November 11, 2025
தி.மலை: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்!

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News November 11, 2025
தி.மலை: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. (SHARE IT)
News November 11, 2025
தி.மலை: லைசன்ஸ் இல்லையென்ற கவலை வேண்டாம்!

தி.மலையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.


