News April 20, 2024

2019ஐ விட 2024இல் வாக்குப்பதிவு குறைவு

image

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலை காட்டிலும், 2024 மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு விகிதம் குறைந்துள்ளது. 2019 தேர்தலில் 72.47% வாக்குகள் பதிவாகியிருந்தது. ஆனால் 2024 தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுபோல 3% வாக்குப்பதிவு குறைந்திருப்பதற்கு, கிராமங்களில் மோசமான போக்குவரத்து, வார இறுதி பயணத்திட்டமே காரணமாகக் கூறப்படுகிறது.

Similar News

News November 11, 2025

ஓய்வு முடிவை அறிவித்தார் ரொனால்டோ

image

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்னும் 1 அல்லது 2 ஆண்டுகளில் ஓய்வு பெறுவேன் என்று தெரிவித்துள்ளார். 2026 உலகக் கோப்பையில் விளையாட திட்டமிட்டுள்ள அவர், அப்போது தனக்கு 41 வயதாகி இருக்கும் என்றும், ஓய்வு பெறுவதற்கு அதுவே சரியான தருணம் எனவும் பேசியுள்ளார். அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு போர்ச்சுகல் அணி இதுவரை தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News November 11, 2025

BREAKING: 2026-ல் 24 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

2026-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் அட்டவணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டில் 24 நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், தைப்பூசம், மகாவீரர் ஜெயந்தி, ரம்ஜான், புனித வெள்ளி, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட 24 நாள்கள் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

எல்லாருக்கும் ஐடியா கொடுத்தாரு… ஆனா அவருக்கு?

image

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 0-7 இடங்கள் வெல்லும் என்றும், 9 – 13% வாக்குகள் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பெரிய கட்சிகளுக்கு எல்லாம் வியூகம் வகுத்துக் கொடுத்து வெற்றிபெற வைத்த பிரசாந்த் கிஷோரால், தன் கட்சிக்கு வெற்றியை தரமுடியவில்லை எனப் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இதுபற்றி உங்களின் கருத்து?

error: Content is protected !!