News November 11, 2025
Sports Roundup: உலக போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம்

*உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 2 தங்கம். *ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிகள் ஃபைனலுக்கு முன்னேற்றம். *ஆண்கள் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் மதுரையில் வரும் 28-ம் தேதி தொடக்கம். *ரஞ்சி கோப்பை தொடரில் தமிழகம் 2-வது தோல்வி. *ஜப்பானில் இன்று தொடங்கும் ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் லக்சயா சென், பிரனாய் ஆயுஷ், தருண், கிரண் ஜார்ஜ் பங்கேற்பு.
Similar News
News November 11, 2025
குழந்தைகளை காக்க ஆஸி., அரசின் புதிய முடிவு!

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், தற்கொலை எண்ணம், உடல்நலக்குறைவு என குழந்தைகள் சிறுவயதிலேயே சீரழிகின்றனர். இதனை தடுக்க நினைத்த ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் SM பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த தடை டிச.10-ல் இருந்து அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற ஒரு தடை இந்தியாவில் கொண்டுவந்தால் எப்படி இருக்கும்?
News November 11, 2025
ரசிகர்கள் சோகமடைவதை விரும்பாத விஜய்!

‘யார் பெற்ற மகனோ’ என்ற பாடலுடன் எமோஷனலாக ‘ஜனநாயகன்’ படம் முடிவடையும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அதை விஜய் விரும்பவில்லையாம். ரசிகர்கள் குஷியுடன் ஆனந்தமாக விடைபெற வேண்டும் என்ற திட்டத்தில் அவர் இருக்கிறாராம். அதற்காக தான், ‘தளபதி கச்சேரி’ பாட்டில் கடைசி ஒரு நிமிடம் பயங்கர Goosebumps கொடுக்கும் வகையில் தயார் செய்துள்ளார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து தியேட்டரில் பார்ப்போம்!
News November 11, 2025
BREAKING: அதிமுகவில் புது டிவிஸ்ட்

மன்னிப்பு கேட்டால் மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமையிடம் பேசுவோம் என <<18251927>>Ex அமைச்சர் OS மணியன்<<>> பேசியது பேசுபொருளாகியுள்ளது. சசிகலா, TTV, OPS, செங்கோட்டையன் ஆகியோர் துரோகிகள் என EPS உள்ளிட்ட நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இந்த நிலையில், OS மணியனின் இந்த கருத்து தனிப்பட்ட கருத்தா (அ) அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்கும் எண்ணத்திற்கு நிர்வாகிகள் வந்துவிட்டனரா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.


