News November 11, 2025
எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வது? தேஜஸ்வி

டெல்லி கார் குண்டு வெடிப்பு குறித்து பேசியுள்ள தேஜஸ்வி யாதவ், இந்தியர்கள் எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய பாதுகாப்பு விஷயத்தில் அரசுடன் உறுதியாக நிற்போம் எனவும், நாட்டின் பாதுகாப்பை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விஷயத்தில் முழுமையான விசாரணை நடத்தி, நியாயமான நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
Similar News
News November 11, 2025
போஸ்டர் மூலம் சதித் திட்டத்திற்கான முதல் தடயம்

கடந்த அக்.27-ம் தேதி ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டது. 2019-க்கு முன் இதுபோன்ற நிகழ்வு சாதரணமானது. ஆனால், தற்போது போஸ்டர் ஒட்டுவது அரிதான ஒன்று. இதை துருப்பாக வைத்துதான் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்து, ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, உ.பி.,யில் நடக்கவிருந்த சதித்திட்டத்தை போலீசார் முறியடித்துள்ளனர்.
News November 11, 2025
இந்தியாவுடன் வித்தியாசமான ஒப்பந்தம்: டிரம்ப்

இந்தியா உடன் ஒரு நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இந்தியாவுடன் மிகவும் வித்தியாசமான ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக கூறியுள்ள அவர், இதுதொடர்பாக இந்தியாவுக்கு வந்து PM மோடியை சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. இதன்மூலம், இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 11, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

தங்கம் விலை இன்று(நவ.11) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,760 அதிகரித்துள்ளது. 22 கேரட் 1 கிராம் ₹11,700-க்கும், சவரன் ₹93,600-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு, இந்திய பங்குச்சந்தைகள் சரிவு உள்ளிட்ட காரணங்களே நம்மூரில் தங்கம் விலை உயர காரணம் என வணிக நிபுணர்கள், தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


