News November 11, 2025

தி.மலை: ஆற்றில் மூழ்கி பலியான பள்ளி மாணவன்!

image

ஆரணி கோட்டை வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர்கள் ரவி-சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு சுனில்ராஜ் (11) என்ற ஒரு மகனும் உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் கமண்டல நதியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் ஆற்றில் மூழ்கியுள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், நேற்று (நவ.10) உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 11, 2025

தி.மலை: B.E போதும், இஸ்ரோவில் வேலை ரெடி!

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. 1. வகை: மத்திய அரசு 2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/- 3) கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech 4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38) 5. கடைசி தேதி: 14.11.2025 6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: (<>CLICK HERE<<>>) 7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 11, 2025

தி.மலை மகா தீபம் தேதி அறிவிப்பு!

image

தி.மலையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 24-கொடியேற்றம், நவம்பர் 27-வெள்ளி கற்பக விருட்சம் & வெள்ளி காமதேனு வாகனம், நவம்பர் 28-வெள்ளி ரிஷப வாகனம், நவம்பர் 29-வெள்ளி ரதம், நவம்பர் 30-பஞ்சமூர்த்திகள் மகா ரதம், டிசம்பர் 3-காலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் நடைபெறவுள்ளது. மகா தீபம் நடைபெறும் தேதியை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்க.

News November 11, 2025

தி.மலையில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

image

தி.மலை: மழையூர் துணை மின்நிலையத்தில் பராமாரிப்பு பணிகள் இன்று (நவ.11) நடைபெறவுள்ளது. இதனால், காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மழையூர், பெரணமல்லூர், தென்னாத்தூர், விசாகுளத்தூர், ஆணைபோகி, தேசூர், மேலச்சேரி, கடம்பை, மடம், தவனி, விசாமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!