News November 11, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது

சர்வதேச சந்தையில் கடந்த 2 வாரங்களாக மந்த நிலையில் காணப்பட்ட தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 125 டாலர்கள்(₹11,082) அதிகரித்துள்ளது. இதனால், தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) $4,126 ஆக உள்ளது. வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $50-ஐ கடந்துள்ளது. இதனால், நம்மூர் சந்தையில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
Similar News
News November 11, 2025
டெல்லி குண்டு வெடிப்பு: காரை ஓட்டிய நபரின் PHOTO

டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டியவர் ஃபரீதாபாத்தில் டாக்டராக பணியாற்றிய ஒமர் முகமது என தெரியவந்துள்ளது. இவருக்கும் ஃபரீதாபாத்தில் வெடிபொருள்களுடன் சிக்கிய கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தன்னுடைய ஆட்கள் போலீசில் சிக்கியதால் பதற்றமடைந்த ஒமர் முகமது, டெல்லியில் காரை வெடிக்க செய்ததாக கூறுகின்றனர். ஆனால், முன்னதாக மக்கள் அதிகம் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனராம்.
News November 11, 2025
சற்றுநேரத்தில் அமித்ஷா அவசர ஆலோசனை

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தனது அமைச்சக அதிகாரிகளுடன் அமித்ஷா காலை 9.30 மணிக்கு ஆலோசனை நடத்தவிருக்கிறார். இதில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை, பஸ், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளன.
News November 11, 2025
இன்று உலக முரட்டு சிங்கிள்ஸ் டே!

தவறான நபரை காதலிப்பதை விட, சிங்கிளாகவே இருப்பதே மேல் என்ற மனநிலைக்கு பலரும் வந்துவிட்டார்கள். அவர்களுக்காகவே, நவம்பர் 11, சிங்கிள்ஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. 11.11 என்ற நாள், அனைத்தும் ஒன்று என்பதால், இத்தினம் சிங்கிள்ஸ் டே-வாக தேர்ந்தெடுக்கப்பட்டு
கொண்டாடப்படுகிறது. சிங்கிளாக இருப்பதில் என்ன நன்மை இருக்கிறது என கமெண்ட் பண்ணுங்க. இதை படிக்கும் சிங்கிள்ஸ் ஒரு லைக் போடுங்க!


