News November 11, 2025

₹7,000 கோடி to ₹5,000 கோடி.. இழப்பை குறைக்கும் VI

image

வோடஃபோன் ஐடியா நிறுவனம், 2-வது காலாண்டின் ஒருங்கிணைந்த நிகர இழப்பை ₹5,524 கோடியாக குறைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ₹7,176 கோடியாக இருந்தது. அதேபோல், வருவாய் ₹11,194 கோடி (முன்பு ₹10,932 கோடி), ஒரு கஸ்டமரிடம் ஈட்டும் சராசரி வருவாய் ₹188-ஆக (முன்பு ₹166) உயர்ந்துள்ளது. முன்னதாக, வருவாய் இழப்பை சமாளிக்க முடியாமல், இந்நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வதந்தி பரவியது.

Similar News

News November 11, 2025

3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. அதன்காரணமாக நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

News November 11, 2025

₹9,169 கோடி வரி ஏய்ப்பு செய்த சிறிய கட்சிகள்

image

நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் ₹9,169 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு உண்டு. இதை சாதகமாக பயன்படுத்திய சிலர், அக்கட்சிகளுக்கு நன்கொடை வழங்கி, ITR தாக்கல் செய்துள்ளனர். நன்கொடை மிக அதிகமாக இருந்ததால், மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் சந்தேகம் அடைந்து, நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

News November 11, 2025

இதய தேவதை மிருணாள் PHOTOS

image

மிருணாள் தாகூர் நேரடியான தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், ‘சீதா ராமம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த தேவதை. தனது சிரிப்பு மற்றும் கண்கள் செய்யும் மாயஜாலத்தாலும் ரசிகர்களை தன் வசம் கட்டி வைத்துள்ளார். விரைவில் இவர் தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிருணாள் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மின்னும் போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!