News November 11, 2025

Instant Loan பக்கம் சாயும் மக்கள்

image

பேப்பர் ஒர்க் இல்லாத, அதே சமயம் உடனே பணம் கிடைக்கும் Instant Loan பக்கம் மக்கள் அதிகம் சாய்ந்து வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு ‘Paisa Bazaar’ நடத்திய சர்வேயில், 42% பேர் Instant Loan வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். 25% பேர் வட்டி குறித்து கவலை எழுப்பிய நிலையில், 80% பேர் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் கடன் வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளதும், 41% பேர் சமீபத்தில் கடன் வாங்கியதும் தெரியவந்துள்ளது.

Similar News

News November 11, 2025

நவம்பர் 11: வரலாற்றில் இன்று

image

*தேசிய கல்வி தினம். *1821 – ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி பிறந்தநாள். *1888 – விடுதலை போராட்ட வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்தநாள். *1899 – தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிறந்தநாள். *1933 – யாழ் பொது நூலகம் திறக்கப்பட்டது. *1974 – ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ பிறந்தநாள். *1994 – கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் பிறந்தநாள். *2004 – பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசிர் அராஃபத் இறந்தநாள்.

News November 11, 2025

Cinema Roundup: ₹50 கோடி வசூலித்த ‘பாகுபலி: தி எபிக்’

image

*வரும் 14-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் ‘டியூட்’ வெளியாகிறது. *தனுஷின் ‘தேரே இஸ்க் மெயின்’ இந்தி படத்தில் பிரபுதேவா நடிப்பதாக தகவல். *‘பீட்சா’ படத்தில் தான் முதன்முதலாக அறிமுகமானேன்: கவின். *‘ரெட்ரோ’ படத்திற்கு பிறகு ‘நான் வைலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா சரண் சிறப்பு பாடலுக்கு நடனமாடுகிறார். *‘பாகுபலி: தி எபிக்’ ₹50 கோடி வசூலித்துள்ளதாக தகவல். *’ஆண் பாவம் பொல்லாதது’ படம் ₹10 கோடி வசூலித்துள்ளதாக தகவல்.

News November 11, 2025

பொதுச் சின்னத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

ECI-யிடம் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் தங்கள் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதேசமயம் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிலையில் 2026 தேர்தலுக்காக பதிவு செய்த கட்சிகள், நாளை முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என ECI தெரிவித்துள்ளது.

error: Content is protected !!