News November 11, 2025
ஆண்மையை இழக்க நேரிடும்: ஆண்களே இதை செய்யாதீங்க!

சாதாரண விஷயம் என்று நீங்கள் அலட்சியமாக செய்யும் சில விஷயங்கள், உங்கள் எதிர்காலத்துக்கே ஆபத்தாக வந்தால் என்ன செய்வீர்கள்? ஆம், கவனமாக இல்லையெனில் உண்ணும் உணவு முதல் அணியும் ஆடை வரை பல பழக்கங்கள் ஆண்மைக் குறைவுக்கு காரணமாகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அவற்றில் சிலவற்றை மேலே படங்களாக தொகுத்து வழங்குகிறோம். அவற்றை தவிர்த்து ஆரோக்கிய வாழ்க்கை வாழுங்கள். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணலாமே!
Similar News
News November 11, 2025
International Roundup: அமெரிக்க அரசு முடக்கத்திற்கு தீர்வு

*அமெரிக்க அரசு முடக்கம் இந்த வார இறுதிக்குள் சீராகும் என எதிர்பார்ப்பு. *சிரிய அதிபர் அகமது அல் ஷாரா – அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை. *பிலிப்பைன்ஸை தாக்கிய Fung-wong புயலால் 4 பேர் பலி. *காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலி. *ஊழல் வழக்கில் சிறையில் இருந்த ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி விடுவிப்பு. *ஈராக்கில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
News November 11, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 11, ஐப்பசி 25 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சப்தமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: கேட்டை ▶சிறப்பு: சக்தி நாயனார் குருபூஜை, செவ்வாய் வழிபாட்டு நாள். ▶வழிபாடு: நவக்கிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.
News November 11, 2025
‘ரஜினி 173’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்?

சுந்தர் சி இயக்கும் ‘ரஜினி 173’ படத்தில், கமல்ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஏற்கெனவே தான் தயாரித்த ‘மகளிர் மட்டும்’, ‘நள தமயந்தி’ படங்களில் கமல் கெஸ்ட் ரோலில் நடித்தார். அது அந்த படங்களின் வியாபாரத்திற்கு பயன்பட்டது. தற்போது, அவர் தயாரிப்பது ரஜினி படம் என்பதால், கமல் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றே தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


