News November 10, 2025
தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்… தொடர் சோகம்

சமீப காலமாக தமிழ் திரைத்துறை பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது. குறுகிய காலத்தில் பல சினிமா நட்சத்திரங்கள் பிரிந்துவிட்டனர். தமிழ் சினிமா இவர்களை என்றும் நினைவில் வைத்திருக்கும். இவர்களது நகைச்சுவை, இசை, திரைப்படங்கள் ஆகியவை எப்போதும் நம் இதயங்களில் உயிர் வாழும். யாரெல்லாம் மறைந்தனர் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
Similar News
News March 15, 2026
திமுகவின் தளபதி கோட்டையை குறிவைத்த காங்கிரஸ்

காங்கிரஸ் விரும்பும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த கிரிஷ் சோடங்கர் இன்று சென்னை வருகிறார். ஏற்கனெவே வெற்றிபெற்ற 17 தொகுதிகள், மற்றும் மதுரை வடக்கு உள்ளிட்ட சில தொகுதிகளையும் காங்கிரஸ் எதிர்பார்க்கிறதாம். மதுரை வடக்கில் கடந்த முறை திமுகவின் தளபதி வெற்றிபெற்றார். சமீபத்தில் அவர் காங்கிரசை கடுமையாக விமர்சித்த நிலையில், அவருக்கு செக் வைப்பதற்காக மதுரை வடக்கு தொகுதியை காங்., கேட்கிறதாம்.
News March 15, 2026
FLASH: ஜம்முவில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் யூரி பகுதியில் இந்திய ராணுவம், J&K போலீஸ் நடத்திய கூட்டு நடவடிக்கையில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யூரி பகுதியில் கடந்த 2 நாள்களாக அதிரடி தேடுதல் வேட்டை நடந்தது. இதில், கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து AK 47 துப்பாக்கி, வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
News March 15, 2026
அஜித் குடும்பஸ்தன்; அப்போ விஜய்? தமன்னா பேச்சு

விஜய், அஜித் குறித்து தமன்னா பேசியது வைரலாகிறது. விஜய் எளிமையான & மென்மையான மனிதர் என்ற அவர், சிறந்த டான்ஸர் என்றும் புகழ்ந்தார். அதேபோல், ‘வீரம்’ பட ஷூட்டிங்கின்போது அஜித் தனக்கு இட்லி செய்து கொடுத்தார் என்று நினைவுகூர்ந்த தமன்னா, அஜித் மென்மையான மனிதர் மட்டுமல்லாது நல்ல குடும்பஸ்தன் என்றும் தெரிவித்தார். விஜய், அஜித் பற்றி உங்கள் கருத்து என்ன?


