News November 10, 2025
பொதுச் சின்னத்துக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

ECI-யிடம் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் தங்கள் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதேசமயம் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிலையில் 2026 தேர்தலுக்காக பதிவு செய்த கட்சிகள், நாளை முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என ECI தெரிவித்துள்ளது.
Similar News
News November 10, 2025
டெல்லி கார் வெடிப்பு: அமித்ஷாவிடம் PM ஆலோசனை

தலைநகர் டெல்லியில் நடத்த கார் வெடிப்பில் 10 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெடிவிபத்து குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், PM மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனிடையே கார் வெடிவிபத்து குறித்து டெல்லி தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
News November 10, 2025
கர்ப்பிணிகள் செய்யவே கூடாத தவறுகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். இந்த காலகட்டத்தில் செய்யும் சில தவறுகள் தாயையும், சேயையும் பாதிக்கலாம். ➤காபி, டீ அதிகமாக அருந்த வேண்டாம் ➤டாக்டரை கேட்காமல் மருந்துகளை எடுக்க வேண்டாம் ➤அதிக நேரம் நிற்காதீர்கள் ➤எதிர்மறையான விஷயங்களை யோசிக்கவோ, பேசவோ கூடாது ➤ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.
News November 10, 2025
ரயில் நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள ரயில் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக கொல்கத்தா, ஸ்ரீநகர், காசியாபாத், லக்னோ உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே கார் வெடி விபத்து குறித்து முழு விவரத்தை டெல்லி காவல் ஆணையரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுள்ளார்.


