News November 10, 2025
காஞ்சிபுரம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 19, 2026
காவல் நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026னை முன்னிட்டு, நேற்று (18.03.2026) 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சின்ன காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் கோலமிட்டு, விழிப்புணர்வு பதாகையுடன் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் இருந்தனர்.
News March 18, 2026
காஞ்சி: ரேஷன் கார்டு உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க – போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.
News March 18, 2026
காஞ்சி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

காஞ்சிபுரம் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க


