News November 10, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

தமிழகத்தில் இன்று முதல் 13-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. இன்று தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும், நாளை ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். அதேபோல், 13-ம் தேதி கோவை, நீலகிரி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News November 10, 2025
BREAKING: அனைத்து ரேஷன் கார்டுக்கும் முக்கிய அறிவிப்பு

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக EPS குற்றஞ்சாட்டியதற்கு, அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்திருந்தார். அதன்படி, நவ.15-ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கோதுமை அனுப்பப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ., மாதத்திற்கான கோதுமையை இதுவரை பெறாத ரேஷன் அட்டைதாரர்கள், 15-ம் தேதிக்கு பின் ரேஷன் கடைகளுக்குச் சென்று வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீங்க கோதுமை வாங்கியாச்சா?
News November 10, 2025
திமுகவை எப்படி விஜய்யால் தனியாக வீழ்த்த முடியும்? பாஜக

சினிமா பாடலை அரசியலுக்கு பயன்படுத்துவது தமிழ்நாட்டுக்கு புதிதல்ல என வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். விஜய்யின் ‘தளபதி கச்சேரி’ பாடலில் அரசியல் வரிகள் இடம்பெற்றுள்ளது ஆச்சரியமான விஷயம் இல்லை என தெரிவித்த அவர், தனியாக விஜய் எப்படி திமுகவை வீழ்த்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். பாடலில் ஒன்னா சேரு, ஒன்னா சேரு என கூறும் அவர், யாருடன் இணையப் போகிறார் என்றும் கேட்டுள்ளார்.
News November 10, 2025
USA-ல் உயிரிழந்த இந்திய மாணவி: சளி காரணமா?

USA டெக்சாஸில், ஆந்திராவை சேர்ந்த 23 வயது மாணவி ராஜ்யலட்சுமி தனது அப்பார்ட்மெண்ட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பட்டம் பெற்று வேலை தேடிக்கொண்டிருந்த ராஜி, கடந்த சில நாள்களாக கடும் சளி மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர இணையத்தில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.


