News November 10, 2025
வரி விதிப்பை விமர்சிப்பவர்கள் முட்டாள்கள்: டிரம்ப்

வெளிநாட்டு பொருள்கள் மீதான சுங்க வரியை விமர்சனம் செய்பவர்கள் முட்டாள்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு பங்கு சந்தை உயர்ந்துள்ளது எனவும், ஏறக்குறைய பணவீக்கம் இல்லாத நாடாக USA இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். மேலும், வரி விதிப்பதன் மூலம் உலகின் மிக பெரிய பணக்கார நாடாக USA மாறி இருப்பதாக கூறிய அவர், தற்போது நமது நாடு அனைவராலும் மதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
திமுகவை எப்படி விஜய்யால் தனியாக வீழ்த்த முடியும்? பாஜக

சினிமா பாடலை அரசியலுக்கு பயன்படுத்துவது தமிழ்நாட்டுக்கு புதிதல்ல என வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். விஜய்யின் ‘தளபதி கச்சேரி’ பாடலில் அரசியல் வரிகள் இடம்பெற்றுள்ளது ஆச்சரியமான விஷயம் இல்லை என தெரிவித்த அவர், தனியாக விஜய் எப்படி திமுகவை வீழ்த்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். பாடலில் ஒன்னா சேரு, ஒன்னா சேரு என கூறும் அவர், யாருடன் இணையப் போகிறார் என்றும் கேட்டுள்ளார்.
News November 10, 2025
USA-ல் உயிரிழந்த இந்திய மாணவி: சளி காரணமா?

USA டெக்சாஸில், ஆந்திராவை சேர்ந்த 23 வயது மாணவி ராஜ்யலட்சுமி தனது அப்பார்ட்மெண்ட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பட்டம் பெற்று வேலை தேடிக்கொண்டிருந்த ராஜி, கடந்த சில நாள்களாக கடும் சளி மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர இணையத்தில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
News November 10, 2025
சுத்தமான காற்று.. டாப் 10 நகரங்கள்

இந்தியா, பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. சில நகரங்களில் காற்றின் தரம் மிகவும் கவலைக்கிடமாக இருந்தாலும், சில நகரங்களில் காற்று சுத்தமாகவும் சுவாசிக்க பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. எந்தெந்த நகரங்கள் சுத்தமான காற்றுடன் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE IT.


