News April 20, 2024
உக்ரைன் அதிபரை கொலை செய்ய ரஷ்யா சதி செய்ததா?

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கொலை செய்ய சதிசெய்த பாவெல் கே என்ற நபரை போலந்து பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ரஷ்யாவின் ராணுவ உளவுத்துறைக்காக போலந்தில் இருந்தபடி, தகவல்களை சேகரித்து ரகசியமாக அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், இது குறித்து ஒற்றறிந்த போலந்து உளவுத்துறை, ரஷ்ஸோ-ஜசியோன்கா விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்ததாகத் தெரியவந்துள்ளது.
Similar News
News August 18, 2025
ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்று (ஆக.18) வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 1,084 புள்ளிகள் உயர்ந்து 81,681 புள்ளிகளிலும், நிஃப்டி 363 புள்ளிகள் அதிகரித்து 24,995 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. Maruti Suzuki, Hero Motorcop, PG Electorplast Ltd ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் உள்ள நிலையில், Hindustan Petroleum உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன.
News August 18, 2025
உக்ரைன் NATO-வில் சேரக்கூடாது: டிரம்ப்

உக்ரைன், NATO-வில் சேரக்கூடாது என்பதற்காகவே ரஷ்யா போரைத் தொடங்கியது. இந்நிலையில், உக்ரைன் NATO-வில் சேர முடியாது என மத்தியஸ்தம் செய்துவரும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா கைப்பற்றிய கிரிமியா பகுதியையும் உக்ரைன் உரிமை கொண்டாடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். ஜெலன்ஸ்கி விரும்பினால் போரை உடனடியாக நிறுத்த முடியும் (அ) தொடர முடியும் என்றும் டிரம்ப் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News August 18, 2025
உயராத தங்கம் விலை

கடந்த ஒரு வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், இன்று விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹74,200-க்கும், கிராமுக்கு ₹9,275-க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து விலை குறைந்ததால், வாரத்தின் முதல் நாளான இன்று உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், நகை பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.