News November 10, 2025

சற்றுநேரத்தில் SP வேலுமணி தனியாக தொடங்குகிறார்

image

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகம் செங்கோட்டையன் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனால், கோபிசெட்டிபாளையத்தில் புதிய அலுவலகத்தை பிற்பகல் 12 மணிக்கு Ex அமைச்சர் SP வேலுமணி திறந்து வைக்கிறார். செங்கோட்டையன், அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் கோர்ட்டில் EPS தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இருதரப்பு பிரிவால் கோபி அதிமுகவினர் குழப்பத்தில் உள்ளனர்.

Similar News

News November 10, 2025

பயனாளர்களுக்கு ஷாக் கொடுத்த யூடியூப் நிறுவனம்!

image

யூடியூப் Ad-களை தவிர்க்க, பலரும் Ad blocker பயன்படுத்துகின்றனர். அப்படியான யூஸர்களுக்கு யூடியூப் நிறுவனம் ஷாக் கொடுத்துள்ளது. Ad blocker யூஸ் பண்ணுவோர் இனி யூடியூப்பில் வீடியோவே பார்க்க முடியாது. தனது புதிய அப்டேட்டில் Ad blocker இருப்பதை கண்டறியும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ள யூடியூப், அவர்களுக்கு சேவை வழங்குவதையும் நிறுத்துகிறது. Ad blocker-ஐ எடுத்தால் மட்டுமே, வீடியோ பார்க்க முடியும்.

News November 10, 2025

மற்றொரு திமுக தலைவரின் பதவி பறிப்பு

image

சங்கரன்கோவில், <<18079595>>திட்டக்குடி<<>> வரிசையில் கிருஷ்ணகிரி நகராட்சியின் சேர்மனும் பதவியை இழந்துள்ளார். திமுகவை சேர்ந்த பரிதா நவாப்புக்கு எதிராக சொந்த கட்சியின் கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. திமுகவில், பல இடங்களில் உள்கட்சி பூசல் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் அடுத்தடுத்த பதவியிழப்பு சம்பவங்கள் தலைமைக்கு தலைவலியை கொடுத்துள்ளன.

News November 10, 2025

வடசென்னை பார்த்து வருந்தினேன்: நடிகர் கிஷோர்

image

நடிக்கும்போது தான் கண்டு வியந்த காட்சிகள் எதுவும் ‘வடசென்னை’ படத்தில் இடம்பெறாததால் வருத்தப்பட்டதாக நடிகர் கிஷோர் தெரிவித்துள்ளார். ஆனால், ‘அரசன்’ படத்தில் வடசென்னையின் செந்திலாக இடம்பெற விரும்புவதாகவும், வெற்றிமாறனின் அழைப்புக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வடசென்னை 1-ல் சேர்க்கப்படாத Footage-களை வெற்றிமாறன் ரிலீஸ் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

error: Content is protected !!