News November 10, 2025
SSLC தகுதி போதும்.. மத்திய அரசு நிறுவனத்தில் 542 வேலை!

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10-வது, ITI தேர்ச்சி. வயது வரம்பு: 18 – 25 வரை. சம்பளம்: ₹18,000 – ₹63,200 வரை கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News November 10, 2025
SIR மூலம் திமுகவை அழிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

SIR மூலம்தான் திமுகவை அழிக்க முடியும் என சிலர் நினைக்கிறார்கள்; அந்த முயற்சி ஒருபோது எடுபடாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்க்க அதிமுகவுக்கு தைரியம் இல்லை என சாடிய அவர், DMK தொடர்ந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி ADMK மனு தாக்கல் செய்தது கபட நாடகம் என விமர்சித்தார். மேலும், உண்மையிலேயே அக்கரை இருந்தால் அதிமுக முன்கூட்டியே வழக்கு தொடர்ந்து இருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.
News November 10, 2025
Magic அரிசி: சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம்!

அரிசியை வேக வைத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் ஊறவைத்த பின் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் அரிசி தெரியுமா? அசாமின் கோமல் சால் எனப்படும் மந்திர அரிசி தான் அது. இதை தண்ணீரில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும். சாதம் பதத்துக்கு மாறிவிடும். இதன் பயன்பாடு காலப்போக்கில் குறைந்த நிலையில், சமைக்க நேரமில்லாமல் ஓடும் மக்களால், மீண்டும் இதற்கு மவுசு கூடியுள்ளது. ஆன்லைனில் கூட விற்பனை தொடங்கியுள்ளது.
News November 10, 2025
பள்ளி மாணவர்களுக்கான HAPPY NEWS

புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நவ.23, 24 தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 2 குழுக்களில் உள்ள 32 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் சுமையை மேலும் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் வகுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


