News November 10, 2025
தி.மலை: பெண்களுக்கு முக்கியமான APP!

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., சமீப காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வரும் நிலையில், அனைத்து பெண்களிடத்திலும் அரசின் ‘காவல் உதவி’செயலி இருப்பது அவசியம். இதன் மூலம், அவசர எச்சரிக்கை, இருப்பிடம் பகிர்வு, அவசர புகார் போன்றவைகளை விரைவில் செய்ய முடியும். <
Similar News
News November 10, 2025
ஆரணி: நதியில் மூழ்கி சிறுவன் பலி!

தி.மலை: ஆரணி வட்டம், ஜெயலட்சுமி நகர் பின்புறம் உள்ள கமண்டல நாக நதி ஆற்றில் நேற்று மாலை குளிக்க 3 நபர்கள் சென்றபோது ஒரு சிறுவன் தவறி ஆற்றில் விழுந்துள்ளான். அவனது உடல் இன்று(நவ.10) காலை சுமார் 9:00 மணி அளவில் கண்டெடுக்கப்பட்டு பிறகு பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இச்சமபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 10, 2025
தி.மலை: உங்களிடம் G Pay / PhonePe / Paytm இருக்கா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News November 10, 2025
திருவண்ணாமலையில் TNPSC இலவச பயிற்சி!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் TNPSC Group-2, 2A முதன்மைத் தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறுகிறது. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆதார் நகல், புகைப்படம், விண்ணப்ப நகலுடன் வகுப்பில் கலந்து கொள்ளலாம்.


