News November 10, 2025

ஆன்லைனில் SIR படிவத்தை விண்ணப்பிப்பது எப்படி? 2/2

image

★அதாவது, பழைய படிவத்தில் உங்கள் பெயர் இருந்தது (or) பெற்றோரின் பெயர்கள் மட்டுமே இருந்தது (or) யாரின் பெயரும் இல்லை ★இதில், உங்களுக்கான ஆப்ஷனை தேர்ந்தெடுத்து கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் உள்ளிடவும் ★கொடுத்த பிறகு, ஆதார் OTP வரும். அதை கொடுத்தால், படிவம் பூர்த்தி செய்யப்பட்டு விடும். ஆதார் & Voter ID-யில் பெயர் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே, ஆன்லைனில் SIR படிவம் பூர்த்தி செய்ய முடியும்.

Similar News

News November 10, 2025

BREAKING: நடிகர் அபிநய் காலமானார்

image

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி பிரபலமடைந்த நடிகர் அபிநய்(44) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அண்மையில், இவரது சிகிச்சைக்கு நடிகர் தனுஷ் பண உதவி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 10, 2025

புதுப்புது உக்திகளோடு தாக்கும் எதிரிகள்: மு.க.ஸ்டாலின்

image

DMK இயக்கம் என்று சொல்வதால்தான் திமுகவினருக்கு ஓய்வே இல்லை என கூறுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எவ்வளவு பெரிய தடைகள் வந்தாலும், திமுக இயக்கம் நின்றதே இல்லை; அதுபோல நானும் நிற்க நேரமில்லாமல் வேலை செய்துகொண்டிருக்கிறேன் எனத் தெரிவித்தார். மேலும், எதிரிகள் புதுப்புது உக்திகளோடு நம்மை தாக்க புதுப்புது முயற்சிகள் எடுக்கின்றனர். அதையெல்லாம் முறியடித்து 2026-ல் திமுக வெற்றி பெறும் என்றார்.

News November 10, 2025

சந்திப் கிஷனை SIGMA-வாக மாற்றிய ஜேசன்!

image

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு ‘Sigma’ என பெயரிடப்பட்டுள்ளது. சந்திப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக தயாராகிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. Sigma என்பது அதீத தன்னம்பிக்கை கொண்ட ஒரு சுதந்திரமான நபரைக் குறிக்கும் சொல்லாகும்.

error: Content is protected !!