News November 10, 2025
இன்று முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு (கேரளா, ஆந்திரா , கர்நாடகா, புதுச்சேரி) இன்று முதல் பஸ்கள் இயக்கப்படாது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்படி, அண்டை மாநில பஸ்களுக்கு சாலை வரி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும், அண்டை மாநில அரசுகளுடன் தமிழக அரசு பேசி தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 10, 2025
அண்ணாமலையின் செயலால் PM மோடி மகிழ்ச்சி

கோவாவில் நடைபெற்ற ’அயர்ன்மேன் 70.3’ நிகழ்வில் பங்கேற்று நீச்சல், சைக்கிளிங், ஓட்டப்பந்தயத்தை நிறைவு செய்தார் அண்ணாமலை. இதனை பாராட்டி PM மோடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்த அவர், கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
News November 10, 2025
ஆண்ட்ரியாவை சிலை என வர்ணித்த விஜய் சேதுபதி

சிறிய வயதில் பீச்சில் பார்த்த சிலையும், ஆண்ட்ரியாவும் தற்போதுவரை ஒரே மாதிரி இருப்பதாக விஜய்சேதுபதி கூறியுள்ளார். 2006-ல் ஒரு விளம்பரத்தில் ஆண்ட்ரியாவை பார்த்து ‘யார்ரா இந்த பொண்ணு!’ என நினைத்ததாகவும், நாளை தனது மகனும் அதே மாதிரி கேட்பார் என்றும் பேசியுள்ளார். மேலும், வீட்டுக்கு சென்று பெட்டில் படுப்பீங்களா, இல்லை ஃபிரிட்ஜில் உட்காருவீங்களா என கேட்டு அடுக்கடுக்காக வர்ணித்தார்.
News November 10, 2025
பொங்கல் விடுமுறை.. வந்தது புது அப்டேட்!

பொங்கல் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. வரும் ஜன.9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையிலான டிக்கெட் முன்பதிவு தினந்தோறும் காலை 8 மணிக்கு தொடங்கும். ஜன.9-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். ஜன.10-ம் தேதிக்கான டிக்கெட்டை நாளையும், ஜன.11-ம் தேதிக்கான டிக்கெட்டை நாளை மறுதினமும் <


