News November 10, 2025
திருச்சி அருகே சிக்கிய திருட்டு கும்பல்

உப்பிலியபுரம் அடுத்த நாகநல்லூர் ஊராட்சியை சேர்ந்த குமரவேல் (40) என்பவற்றின் டூவீலர் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட கோபி (29), புத்த பிரகாஷ் (29), அஜித் (28), ஹரிகரன் (20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 டூவீலர்கள், ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஒரு மொபட் என மொத்தம் 12 இருசக்கர வாகனங்கள் மீட்டனர்.
Similar News
News November 10, 2025
BREAKING திருச்சி: பட்டப்பகலில் இளைஞர் படுகொலை

திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் இன்று காலை தாமரைச்செல்வன் (24) எனும் இளைஞர் சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கையில் பயங்கர ஆயுதங்களுடன் அவரை துரத்தவே, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற தாமரைசெல்வன் அருகில் இருந்த காவலர் குடியிருப்பில் புகுந்துள்ளார். இருப்பினும், அதை பற்றி கவலைப்படாத கும்பல் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
News November 10, 2025
திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருச்சி மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 10, 2025
திருச்சியில் நாளை பவர் கட்!

திருச்சி மெயின்கார்டுகேட் மற்றும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் நாளை (நவ.11) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் கரூர் பைபாஸ்ரோடு, சத்திரம் பஸ் நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை, உறையூர் ஹவுசிங் யூனிட், கம்பரசம்பேட்டை, ஜீயபுரம், அரியமங்கலம், வேங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 – 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.


