News November 10, 2025

புதுவை: புகைப்படம் அனுப்பினால் ரூ.2000 பரிசு!

image

புதுச்சேரி உழவர்கரை பகுதியில் உள்ள அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் குப்பைகள்,கழிவுகள் கொட்டப்பட்டு அந்த இடம் மலை போல குப்பைகள் குவிந்து அசுத்தமாய் காட்சியளிக்கிறது. இதுகுறித்து குப்பைகளை கொட்டும் வாகனங்களின் விபரங்களை புகைப்படம் எடுத்து 75981-71674 என்ற எண்ணுக்கு அனுப்பி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2,000 சன்மானம் வழங்கப்படும் என உழவர்கரை நகராட்சி அறிவித்துள்ளது.

Similar News

News November 10, 2025

புதுவை பி.எஸ்.என்.எல் டெண்டர் அறிவிப்பு

image

புதுவை பி.எஸ்.என்.எல் சார்பில் வில்லியனூர், மேட்டுப் பாளையம் பகுதிகளில் வாடிக்கையாளர் சேவை மையங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை நிர்வகிக்க விருப்பமுள்ள வணிக நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ டெண்டர் போர்டல் http://www.etenders.gov.in/eprocure/app (அ) http://bsnl.co.in/tenders/tenderlivesearch என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2025

புதுவை: போலீஸ்காரர் மோட்டார் சைக்கிள் திருட்டு

image

அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் திவாகர்(30). இவர் புதுவை காவல்துறையில் போலீஸ்காரராக பணி புரிகிறார். சம்பவத்தன்று அவர் உறவினர் சுரேந்தர், திவாகரின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு கடற்கரையில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போயுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 10, 2025

புதுவை: B.E., முடித்தவர்களுக்கு வேலை ரெடி!

image

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E., / B.Tech.,
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!