News November 10, 2025

மயிலாடுதுறை: கல் வீசிய கைக்கு மாவுக்கட்டு!

image

பொறையார் அரசலங்குடி பகுதியில் பள்ளி வாகனத்தை உடைத்து சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்ட தாமரைச்செல்வன் என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆகாஷ் (20), கபிலன் (20) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அப்போது ஆகாஷ் தப்பி செல்ல முற்பட்டபோது, கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

Similar News

News November 10, 2025

மயிலாடுதுறை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

மயிலாடுதுறை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கே க்ளிக் <<>>செய்து, உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பிறகு உங்க வீட்டு ‘கரண்ட் பில்’ தகவல் உங்க போனுக்கே வந்துடும். அதுபோல உங்கள் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 10, 2025

மயிலாடுதுறை: மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்

image

மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் நேற்று சட்டவிரோத குட்கா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை மாப்படுகை பண்ணையார் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (42) என்பவர் விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சுமார் 210 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

News November 10, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (நவ.9) இரவு 10 மணி முதல் இன்று (நவ.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!