News November 10, 2025

கமல்ஹாசனின் அடுத்த பட டைரக்டர் இவரா?

image

ரஜினியுடன் இணையும் படத்திற்கு முன்பாக, ஒரு படத்தில் நடித்து முடிக்க கமல்ஹாசன் முடிவு எடுத்துள்ளாராம். அதன்படி, ‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ படங்களை இயக்கிய அருண்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இதுதொடர்பாக, சமீபத்தில் இருவரும் நேரில் சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, சண்டை கலைஞர்களான அன்பறிவு இயக்கத்தில் கமல் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 17, 2026

இனி முட்டைகளில் Expiry date சீல்!

image

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் முட்டைகளில் Expiry date சீல் இருக்க வேண்டும் என உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது. கஸ்டமர்கள் ஏமாறுவதை தவிர்க்கவும், உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. சாதாரணமாக முட்டைகள் 2 வாரங்கள் வரை பயன்படுத்தலாம்; ஆனால் 30°C-க்கும் குறைவான வெப்பநிலையில் சேமித்தால் 5 வாரங்கள் வரை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.

News March 17, 2026

தமிழக தேர்தல் வரலாற்றில் முதல்முறை இது நிகழுமா?

image

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு கட்சியும் தனியாக 50% வாக்குகளை பெற்றதில்லை. அதேநேரம், 1971 தேர்தலில் திமுக பெற்ற 48.58% வாக்குகளே தேர்தலில் ஒரு கட்சி பெற்ற அதிகபட்ச வாக்கு சதவீதம் ஆகும். அடுத்தடுத்த இடங்களில் அதிமுக 44.4% (1991), திமுக 42.07% (1996), காங்., 41.10% (1967) ஆகிய கட்சிகள் உள்ளன. 2026 தேர்தலில் ஏதேனும் ஒரு கட்சி 50% வாக்குகளைப் பெறுமா? உங்கள் கணிப்பு என்ன?

News March 17, 2026

நடிகை த்ரிஷா திடீர் முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி

image

நடிகை த்ரிஷா சினிமாவை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 75 படங்களில் நடித்துள்ள அவர், கடந்த 3 மாதங்களாக புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லையாம். அவரது நடிப்பில் ‘கருப்பு’ உள்ளிட்ட 3 படங்கள் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இது த்ரிஷாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

error: Content is protected !!