News November 10, 2025

National Roundup: ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய கட்சி

image

*அங்கோலா சென்றுள்ள ஜனாதிபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. *பிஹாரில் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. நாளை 2-ம் கட்ட தேர்தல். *டெல்லியில் காற்று மாசுபாடுக்கு எதிராக போராடியவர்கள் கைது. *ம.பி.யில் கட்சி நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்காக ராகுல் காந்திக்கு 10 Push-Ups தண்டனை வழங்கப்பட்டது. *மெஹுல் சோக்சியின் ₹46 கோடி சொத்துக்களை ஏலம் விட கோர்ட் ஒப்புதல்.

Similar News

News November 10, 2025

BREAKING: நள்ளிரவில் அதிரடி கைது

image

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்துள்ளனர். 2 படகுகள், மீன்கள், வலைகள் உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கடந்த மாதம் 9-ம் தேதி 47 மீனவர்களை செய்து சிறையில் அடைத்த நிலையில், இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது.

News November 10, 2025

ஆன்லைனில் SIR படிவத்தை விண்ணப்பிப்பது எப்படி? 1/2

image

★முதலில் <>இந்த<<>> Website-க்கு செல்லவும் ★Log-in செய்து, HomePage-ல் ‘Special Intensive Revision (SIR) -2026’ கீழ் உள்ள ‘Fill Enumeration Form’ என்பதை கிளிக் செய்யவும் ★மாநிலத்தை தேர்வு செய்து, ‘Enter EPIC Number’ என்பதில், உங்கள் Voter ID நம்பரை கொடுங்கள் ★அடுத்த பக்கத்தில், உங்களின் அனைத்து தகவல்களும் வரும். இங்கே, மொபைல் நம்பர் கொடுத்து OTP உள்ளிட்ட வேண்டும் ★அடுத்த பக்கத்தில், 3 ஆப்ஷன்கள் வரும்.

News November 10, 2025

ஆன்லைனில் SIR படிவத்தை விண்ணப்பிப்பது எப்படி? 2/2

image

★அதாவது, பழைய படிவத்தில் உங்கள் பெயர் இருந்தது (or) பெற்றோரின் பெயர்கள் மட்டுமே இருந்தது (or) யாரின் பெயரும் இல்லை ★இதில், உங்களுக்கான ஆப்ஷனை தேர்ந்தெடுத்து கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் உள்ளிடவும் ★கொடுத்த பிறகு, ஆதார் OTP வரும். அதை கொடுத்தால், படிவம் பூர்த்தி செய்யப்பட்டு விடும். ஆதார் & Voter ID-யில் பெயர் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே, ஆன்லைனில் SIR படிவம் பூர்த்தி செய்ய முடியும்.

error: Content is protected !!