News November 9, 2025
சற்றுமுன்: பிதாமகன் காலமானார்

இந்தியாவில் கணினி அறிவியல் கல்வியின் ‘பிதாமகன்’ என போற்றப்படும் மூத்த பேராசிரியர் V.ராஜாராமன்(92) காலமானார். நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களான IIT, IISc உள்ளிட்டவைகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளார். TCS-ன் முதல் CEO ஃபக்கீர் சந்த் கோஹ்லி, Infosys நிறுவனர் NR நாராயண மூர்த்தி ஆகியோர் இவரது மாணவர்கள்தான். இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு 1998-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்திருந்தது.
Similar News
News November 10, 2025
இன்று முதல் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. குருவாயூர் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி சூப்பர்ஃபாஸ்ட், சேது சூப்பர்ஃபாஸ்ட், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே செல்லும், அங்கிருந்து மட்டுமே புறப்படும், எழும்பூர் செல்லாது. அதேபோல், அகமதாபாத் – திருச்சி சிறப்பு ரயில் தாம்பரம், எழும்பூர் வழியாக இயங்காது.
News November 10, 2025
விஜய்யை சந்தித்த திமுக கூட்டணி கட்சி MP

திமுக கூட்டணி கட்சி MP-ஆன சு.வெங்கடேசன், பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து பேசியதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லையாம், சினிமா தொடர்பான சந்திப்பாம். ‘வேள்பாரி’ நாவலை 3 பாகங்களாக ஷங்கர் படமாக்கும் நிலையில், அதில் விஜய் ஒரு பாகத்தில் நடிப்பதாக பேச்சு இருந்தது. அது தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 515 ▶குறள்: அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. ▶பொருள்: செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி, இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.


