News November 9, 2025

மயக்கும் ஓவியமாய் ஜான்வி கபூர்

image

ஜான்வி கபூர் தனது அழகு, அற்புதமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தை வென்றுள்ளார். பாலிவுட் நட்சத்திரமாக தன்னை நிலைநிறுத்திய அவர், தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவரது அழகு மற்றும் நயமிக்க முகபாவனைகள் காரணமாக பெரும் ரசிகர் பட்டாளம் பெற்றுள்ளார். இன்றைய தலைமுறையினரால் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உள்ள ஜான்வி போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

Similar News

News November 10, 2025

விஜய்யை சந்தித்த திமுக கூட்டணி கட்சி MP

image

திமுக கூட்டணி கட்சி MP-ஆன சு.வெங்கடேசன், பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து பேசியதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லையாம், சினிமா தொடர்பான சந்திப்பாம். ‘வேள்பாரி’ நாவலை 3 பாகங்களாக ஷங்கர் படமாக்கும் நிலையில், அதில் விஜய் ஒரு பாகத்தில் நடிப்பதாக பேச்சு இருந்தது. அது தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 10, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 515 ▶குறள்: அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. ▶பொருள்: செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி, இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.

News November 10, 2025

அண்ணாமலையின் ஃபிட்னஸ்.. வாழ்த்திய PM மோடி

image

கோவாவில் நடைபெற்ற ‘அயர்ன்மேன் 70.3’ டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்த அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவை PM மோடி வாழ்த்தியுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகளில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இவை ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்திற்கு பெரும் பங்களிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த டிரையத்லானில் 1.8 கி.மீ., நீச்சல், 90 கி.மீ., சைக்கிளிங், 21.1 கி.மீ., ரன்னிங் செய்ய வேண்டும்.

error: Content is protected !!