News November 9, 2025
அருப்புக்கோட்டை பைபாஸ் அருகே பஸ் விபத்து

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பைபாஸ் ராமசாமிபுரம் விளக்கு பகுதியில் இன்று விபத்து ஏற்பட்டது. பாண்டிச்சேரியில் இருந்து திருச்செந்தூருக்கு பயணம் செய்து திரும்பிய பஸ் விபத்தில் சிக்கியது. இதில், சிலர் லேசாக காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளனர்.
Similar News
News March 28, 2026
விருதுநகர்: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

விருதுநகர் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, Aadhar FaceRD செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.
News March 28, 2026
சாத்தூர்: ரூ.11.53 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு

சாத்தூர் அருகே ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி(62). இவரிடம் தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் – புவனேஸ்வரி தம்பதி ரூ.11.54 லட்சத்திற்கு வீட்டுமனையை விற்பனை செய்து பத்திரபதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சாத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் நீதிபதி அளித்த உத்தரவின் பேரில் 2 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
News March 27, 2026
சிவகாசியில் மீண்டும் காங்கிரஸ் போட்டி

2021 சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வசம் உள்ள தென்காசி & விருத்தாச்சலம் ஆகிய 2 சிட்டிங் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், மீதமுள்ள 16 சிட்டிங் தொகுதிகளை காங்கிரசுக்கே ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக செல்வப்பெருந்தகை சென்னையில் தெரிவித்துள்ளார். எனவே சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியானது.


