News November 9, 2025
வரலாறு படைத்தார் மெஸ்ஸி

கால்பந்து அரசன் மெஸ்ஸி, 400 Assists கொடுத்த 2-வது வீரர் என்ற வரலாற்றை படைத்தார். ஒரு பிளேயர் பாஸ் செய்யும் பாலை வாங்கி மற்றொரு பிளேயர் அதை கோல் போட்டால், பாலை பாஸ் செய்த பிளேயருக்கு 1 Assist கிடைக்கும். அவ்வகையில், இதுவரை அதிக Assists (404) உடன் முதலிடத்தில் உள்ளார் மறைந்த ஹங்கேரி வீரர் ஃபெரென்க் புஸ்காஸ். மெஸ்ஸிக்கு போட்டியாக பார்க்கப்படும் ரொனால்டோ 287 Assists மட்டுமே கொடுத்துள்ளார்.
Similar News
News November 9, 2025
சற்றுமுன்: பிதாமகன் காலமானார்

இந்தியாவில் கணினி அறிவியல் கல்வியின் ‘பிதாமகன்’ என போற்றப்படும் மூத்த பேராசிரியர் V.ராஜாராமன்(92) காலமானார். நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களான IIT, IISc உள்ளிட்டவைகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளார். TCS-ன் முதல் CEO ஃபக்கீர் சந்த் கோஹ்லி, Infosys நிறுவனர் NR நாராயண மூர்த்தி ஆகியோர் இவரது மாணவர்கள்தான். இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு 1998-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்திருந்தது.
News November 9, 2025
இரவில் இருமல் வந்தால்… டிப்ஸ்

இரவு நேரங்களில் திடீரென தொண்டை அடைப்பது போல இருமல் இருக்கிறதா? பதறாதீர்கள். இது தொண்டை அழற்சியால் ஏற்படலாம். உடனடியாக பாலை சூடு செய்து அதில் சிறிது மஞ்சள் பொடி கலந்து குடியுங்கள். மஞ்சளில் உள்ள குர்குமினில், ஆன்டி பாக்டீரியல் தொண்டை அழற்சியை உடனடியாக குணப்படுத்திவிடும். பாலில் மஞ்சள்தூள் கலந்து குடிக்க விரும்பாதவர்கள் அதில் ஒரு சொட்டு தேன் கலந்து குடிக்கலாம்.
News November 9, 2025
BREAKING: நாளை முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு (கேரளா, ஆந்திரா , கர்நாடகா, புதுச்சேரி) நாளை முதல் பஸ்கள் இயக்கப்படாது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்படி, அண்டை மாநில பஸ்களுக்கு சாலை வரி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும், அண்டை மாநில அரசுகளுடன் தமிழக அரசு பேசி தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


