News November 9, 2025
மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம்: TN அரசு

TN அரசு, ஒருங்கிணைந்த கட்டட வளர்ச்சி விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி, குடியிருப்புகள், வணிக இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 750 சதுர மீட்டர்(SM) குடியிருப்புகளுக்கும், 300 SM வணிக இடங்களுக்கும் கூட இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. EV வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
சற்றுமுன்: பிதாமகன் காலமானார்

இந்தியாவில் கணினி அறிவியல் கல்வியின் ‘பிதாமகன்’ என போற்றப்படும் மூத்த பேராசிரியர் V.ராஜாராமன்(92) காலமானார். நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களான IIT, IISc உள்ளிட்டவைகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளார். TCS-ன் முதல் CEO ஃபக்கீர் சந்த் கோஹ்லி, Infosys நிறுவனர் NR நாராயண மூர்த்தி ஆகியோர் இவரது மாணவர்கள்தான். இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு 1998-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்திருந்தது.
News November 9, 2025
இரவில் இருமல் வந்தால்… டிப்ஸ்

இரவு நேரங்களில் திடீரென தொண்டை அடைப்பது போல இருமல் இருக்கிறதா? பதறாதீர்கள். இது தொண்டை அழற்சியால் ஏற்படலாம். உடனடியாக பாலை சூடு செய்து அதில் சிறிது மஞ்சள் பொடி கலந்து குடியுங்கள். மஞ்சளில் உள்ள குர்குமினில், ஆன்டி பாக்டீரியல் தொண்டை அழற்சியை உடனடியாக குணப்படுத்திவிடும். பாலில் மஞ்சள்தூள் கலந்து குடிக்க விரும்பாதவர்கள் அதில் ஒரு சொட்டு தேன் கலந்து குடிக்கலாம்.
News November 9, 2025
BREAKING: நாளை முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு (கேரளா, ஆந்திரா , கர்நாடகா, புதுச்சேரி) நாளை முதல் பஸ்கள் இயக்கப்படாது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்படி, அண்டை மாநில பஸ்களுக்கு சாலை வரி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும், அண்டை மாநில அரசுகளுடன் தமிழக அரசு பேசி தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


