News November 9, 2025

தருமபுரி:பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க!

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க

Similar News

News November 9, 2025

இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம்

image

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (09.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், ராஜ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் , தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் அரிச்சந்திரன் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News November 9, 2025

தருமபுரி: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

தருமபுரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News November 9, 2025

தருமபுரி: கல்வி பயிலும் இடத்தில் கைவரிசை

image

தருமபுரி, பாலக்கோடு அருகே கடந்த, 1ம் தேதி சோமனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியரின் அறையின் பூட்டை உடைத்து, கம்ப்யூட்டர், பிரிண்டர் திருடு போனது. இந்நிலையில் வழக்கின் பெயரில் பாலக்கோடு போலீசார் பரத்குமார்(19), யோகக்குமார்(20), சேர்ந்த பார்த்-தசாரதி(20), ரமேஷ்(20), மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்து. பின் அவர்கள் பயன்படுத்திய கார்கள் லேப்டாப் போன்றவைபறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!