News April 19, 2024

சாம்சங் ஊழியர்கள் ஷாக்…

image

தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது ஊழியர்களை வாரத்திற்கு 6 நாள்கள் பணிக்கு வர உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. பல்வேறு பொருளாதார சவால்களுக்கு மத்தியில் ஊழியர்களை கூடுதல் நாள்கள் வேலை செய்ய அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவில் அமலுக்கு வந்துள்ள இந்த அவசர விதி, விரைவில் மற்ற பிரிவுகளிலும் அமலாகும் எனக் கூறப்படுகிறது.

Similar News

News January 26, 2026

டி20 WC பிளேயிங் 11-ல் சஞ்சு சாம்சன் இடம்பெறுவாரா?

image

டி20 போட்டிகளில் தொடக்க வீரராக சஞ்சு சாம்சனின் பேட்டிங் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஜூன் 2025 முதல், அவர் கடந்த 9 இன்னிங்ஸ்களில் 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவற்றில், பவர் பிளேயில் ஒரு முறை மட்டுமே அவர் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் டி20 WC-க்கான பிளேயிங் 11-ல் அவர் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் இல்லாத பட்சத்தில் இஷான் கிஷனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.

News January 26, 2026

CINEMA 360°: நயன்தாரா பட ரிலீஸ் தேதி இது தான்!

image

*மம்மூட்டி, நயன்தாரா நடித்துள்ள PATRIOT படம் ஏப். 23 அன்று ரிலீசாகிறது. *நடிகர் தினேஷ் நடிக்கும் ‘கருப்பு பல்சர்’ பட டிரெய்லர் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. *விஜய் தேவரகொண்டாவின் 14-வது பட டைட்டில் வீடியோ இன்று வெளியாகிறது. *ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் கடந்த 10 நாட்களில் ₹31 கோடி வசூல் செய்துள்ளது. *ரவிமோகனின் கராத்தே பாபு டீசர் யூடியூபில் 2 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

News January 26, 2026

நேதாஜி பொன்மொழிகள்

image

*வெறும் அரசியல் சுதந்திரத்தால் தேசம் திருப்தி அடையாது. *வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம். *கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள். *முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன். *உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம்.

error: Content is protected !!