News November 9, 2025
அடிக்கடி Scent அடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்க?

Scent அடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால், தொடர்ந்து Scent பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடாக அமையலாம் என எச்சரிக்கப்படுகிறது. Scent-களில் Phthalate என்ற கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும். அதை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, Hormone செயல்பாட்டில் சீர்கேடு, ஆண்களுக்கு இனப்பெருக்க பிரச்னைகளை உண்டாக்குமாம். Scent வாங்கும் போது Phthalate Free என்று இருக்கிறதா என்பதை கவனியுங்கள். SHARE IT.
Similar News
News November 9, 2025
இந்த நாடுகளில் வாழும் குழந்தைகள் பாவம்!

உலகம் முழுவதும் போர் பிரதேசங்களில் வாழும் குழந்தைகள் எண்ணிக்கை 2024-ல் 4.7 கோடியில் இருந்து அதிகரித்து சுமார் 5.2 கோடியாகிவிட்டது. இதனை ‘Save the Children’ அமைப்பு புதிய அறிக்கையில் கூறியுள்ளது. இது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.
News November 9, 2025
விஜய் மனிதாபிமானம் உள்ளவரா? துரைமுருகன்

உச்சபட்ச அதிகார மயக்கத்தில் மனிதாபிமானம் இல்லாமல், சட்டசபையில் CM ஸ்டாலின் பேசியதாக விஜய் விமர்சித்ததற்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். கரூரில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு செல்லாத விஜய் மனிதாபிமானம் உள்ளவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 9, 2025
உங்கள் அக்கவுண்ட்டில் இத முதல்ல மாத்துங்க

சுமார் 2 பில்லியன் கணக்குகள் ஹேக்கர்கள் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஈஸியான பாஸ்வேர்டுகளை வைத்துள்ளதாக Comparitech நிறுவனம் கண்டறிந்துள்ளது. குறிப்பாக, ‘123456’ என்ற பாஸ்வேர்டை 76 லட்சம் பேரும், ‘admin’ என 19 லட்சம் பேரும் வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல அந்த லிஸ்ட்டில், ‘qwerty’, ‘password’, ‘India@123’ போன்ற பாஸ்வேர்டுகளும் இடம்பெற்றுள்ளன. இதை இன்றே மாற்றும்படி அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


