News November 9, 2025

Ph.D மாணவிகளுக்கு பெரிய தொகை வழங்கும் திட்டம்

image

Ph.D பட்டம் பெற படிக்கும் மாணவிகளுக்கு சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் திட்டம் 5 ஆண்டுகளுக்கு மாதம் 35,000 வரை வழங்குகிறது. விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 40-க்கும் குறைவாக இருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி முறை அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகையை பெற முடியாது. அப்ளை பண்ண இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க. அனைவருக்கும் SHARE THIS.

Similar News

News November 9, 2025

இந்த நாடுகளில் வாழும் குழந்தைகள் பாவம்!

image

உலகம் முழுவதும் போர் பிரதேசங்களில் வாழும் குழந்தைகள் எண்ணிக்கை 2024-ல் 4.7 கோடியில் இருந்து அதிகரித்து சுமார் 5.2 கோடியாகிவிட்டது. இதனை ‘Save the Children’ அமைப்பு புதிய அறிக்கையில் கூறியுள்ளது. இது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.

News November 9, 2025

விஜய் மனிதாபிமானம் உள்ளவரா? துரைமுருகன்

image

உச்சபட்ச அதிகார மயக்கத்தில் மனிதாபிமானம் இல்லாமல், சட்டசபையில் CM ஸ்டாலின் பேசியதாக விஜய் விமர்சித்ததற்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். கரூரில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு செல்லாத விஜய் மனிதாபிமானம் உள்ளவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 9, 2025

உங்கள் அக்கவுண்ட்டில் இத முதல்ல மாத்துங்க

image

சுமார் 2 பில்லியன் கணக்குகள் ஹேக்கர்கள் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஈஸியான பாஸ்வேர்டுகளை வைத்துள்ளதாக Comparitech நிறுவனம் கண்டறிந்துள்ளது. குறிப்பாக, ‘123456’ என்ற பாஸ்வேர்டை 76 லட்சம் பேரும், ‘admin’ என 19 லட்சம் பேரும் வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல அந்த லிஸ்ட்டில், ‘qwerty’, ‘password’, ‘India@123’ போன்ற பாஸ்வேர்டுகளும் இடம்பெற்றுள்ளன. இதை இன்றே மாற்றும்படி அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!