News April 19, 2024
சென்னையில் அதிகரித்த வாக்குப்பதிவு

சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக வாக்குகள் பதிவாகியிருக்கிறது. 2019ஆம் ஆண்டு தென் சென்னையில் 57.05% வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில் இன்று 67.82% வாக்கு பதிவாகியிருக்கிறது. அதேபோல, மத்திய சென்னையில் 2019ஆம் ஆண்டு 58.95% வாக்குகள் பதிவானது., இன்று 67.35% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. வட சென்னையில் 2019ஆம் ஆண்டு 64.23% வாக்குகளும் இன்று 69.26% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன.
Similar News
News August 21, 2025
பாஜகவுடன் கூட்டணி ஏன்? இபிஎஸ் விளக்கம்

அதிமுகவை பொறுத்தவரை கொள்கை நிலையானது என்றும், ஆனால் கூட்டணி சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலுக்காக அமைக்கப்படுவது என இபிஎஸ் தெரிவித்துள்ளார். மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு, அதே சமயம் ஊழல் நிறைந்த திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது பாஜக நிலைப்பாடு என்று கூறினார். இருவருக்கும் ஒத்த கருத்து திமுகவை அகற்றுவது அதனால்தான் கூட்டணி சேர்ந்திருப்பதாக கூறினார்.
News August 21, 2025
ஆகஸ்ட் 21: வரலாற்றில் இன்று

*1986 – பிரபல தடகள வீரர் உசேன் போல்ட் பிறந்ததினம்.
*1778 – அமெரிக்கப் புரட்சிப் போரின் போது, பிரிட்டிஷ் படைகள் பிரெஞ்சு குடியேற்றமான பாண்டிச்சேரியை முற்றுகையிட்டன.
*1907 – தோழர் ப.ஜீவானந்தம் பிறந்ததினம்.
*1963 – திரைப்பட நடிகை ராதிகா பிறந்ததினம்.
* 1988 – நேபாள-இந்திய எல்லைப்பகுதியில் 6.9 அளவில் நிலநடுக்கம். இதில் 1,450 பேர் உயிரிழந்தனர்.
News August 21, 2025
டெல்லி விரைந்தார் கவர்னர் ஆர்.என்.ரவி

கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். வரும் ஆக.23-ம் தேதி வரை அவர் அங்கிருக்க உள்ளார். ஆளுநரின் பயணம் திட்டமிட்டது என்றும், டெல்லியில் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் கவர்னர் அடுத்தடுத்த நாட்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட மத்திய அமைச்சர்கள் சிலரை சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.