News April 19, 2024
வாக்களிக்காத பிரபலங்கள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், மக்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இந்த நிலையில், தேர்தல் முடியும் வரை வாக்குச் சாவடி பக்கம் சில பிரபலங்கள் தலையை காட்டவில்லை. அந்த வகையில் நடிகர் சிம்பு, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், அட்லி, நடிகை ஜோதிகா உள்ளிட்டோர் வாக்கு செலுத்தவில்லை.
Similar News
News January 22, 2026
குழப்பத்தை உண்டாக்க அதிமுக முயற்சி: எ.வ.வேலு

ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் தங்களை பேச அனுமதிக்கவில்லை என கூறி <<18923157>>அதிமுகவினர் <<>> சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், சட்டப்பேரவையின் நடைமுறைகளை மாற்றி, அதிமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியிலும் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின் போது கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
News January 22, 2026
அஜித் குமார் மரணம்.. புதிய தகவல் வெளியானது

கோயில் காவலாளி அஜித் குமார், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இவ்வழக்கில் சிறையில் இருக்கும் காவலர்கள் தற்போது ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட்டை நாடியுள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது. மேலும், நிகிதாவின் நகை திருட்டு வழக்கின் நிலை குறித்து சிபிஐ விசாரணை அதிகாரி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
News January 22, 2026
இனி டாக்டர் ரோஹித் சர்மா!

மகாராஷ்டிராவின் அஜிங்கியா DY பாட்டீல் பல்கலை., ரோஹித் சர்மாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. கிரிக்கெட்டில் அவரின் ஈடு இணையற்ற பங்களிப்பு & முன்மாதிரியான தலைமைப் பண்பையும் கெளரவிக்கும் விதமாக இந்த பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் யூனிவர்சிட்டியின் பட்டமளிப்பு விழாவில், ஹிட்மேன் கெளரவிக்கப்படவுள்ளார்.


